கோவை : கோவையில் நடைபெற்ற 2-வது பனை பொருளாதார மாநாட்டில், பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்கும் வகையிலான இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
கோவை : கோவையில் நடைபெற்ற 2-வது சர்வதேச பனை பொருளாதார மாநாட்டில், பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்கும் வகையிலான இரு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

உலகப் பனை வேளாண் பொருளாதாரப் பேரமைப்பு சார்பில் மூன்று நாள் நடக்கும் 2-வது உலகப் பனை பொருளாதார மாநாடு சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல் நாளில், முன்னாள் மத்திய கயிறு வாரியத்துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் சாந்தலிங்க அடிகளார் கலந்து கொண்டனர். பார்க் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், குமாரி நம்பி எழுதிய 'பனை பொருளாதாரம்' மற்றும் உடுமலை கவி எழுதிய 'பனை எழுபது' ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. 'பனை பொருளாதாரம்' புத்தகமானது பனை மரத்தினால் இருக்கும் பொருளாதார வாய்ப்புகளை விளக்குவதாக இருக்கிறது. இதேபோல, 'பனை எழுபது' புத்தகமானது பனை மரத்தின் வகைகளும், அவற்றின் பயன்பாடுகளைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் உள்ளது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பனை மரம் மற்று அதன் காய்களினால் உருவாக்கப்பட்ட தின்பண்டங்களின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் சுமார் 2,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.