கோவை : கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் குழியால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை : கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் குழியால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பொதுமக்கள் உக்கடம், அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், அம்மன்குளம் குடியிருப்பில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், கிட்டாள் என்ற முதியவரின் குடும்பத்தினர் 628 எம் பிளாக்கில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதியவர் கிட்டாளின் வீட்டீல் திடீர் என குழி விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், இது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அவசரம் அவசரமாக குழியை மூடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான தகவலை வெளியே பரப்ப வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் அஸ்திவாரம் சரியில்லாததால் தான் இந்த குழிவிழுந்து உள்ளது என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.