கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று வாக்கு சேகரித்தார்.

சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளான காடுவெட்டி பாளையாம், கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் தீவர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ஈஸ்வரன் பேசியதாவது :- அ.தி.மு.க. ஆட்சி குற்றவாளிகளைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சியாக உள்ளது. எனவே, இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. உதாரணத்திற்கு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு இந்த ஆட்சி பாதுகாவலனாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் பட்டப்பகலில் 12 மணிக்குக் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. ஈரோடு, பெரம்பலூரில் நடைபெற்ற சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இன்மையைக் காட்டுகின்றது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் கொள்ளையடிக்க தமிழக மக்கள் ஓட்டுப் போட வேண்டாம். 8 ஆண்டுகளாக தமிழக மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும், என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.