திருப்பூர்: திருப்பூரில் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி. இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வந்தார். இவர் நல்லூர் அடுத்த திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் ஓட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மதியம் 2.30 மணிக்கு பணியை முடித்துக் கொண்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து பெண் காவலர் பர்வின் பாவி மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் போலீஸ் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.