மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தல் : தமிழ் மாநில காங்கிரசின் யுவராஜ் பேட்டி

நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று உதகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெரும் வெற்றியை தரும். தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மதவாதத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி வெற்றி பெறும். தற்போது, நடைபெற உள்ள தொகுதி தேர்தல்களிலும் சேர்த்து 40-க்கு 40-ம் வெற்றி பெறும். தி.மு.க. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும் கட்சியைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியில் முடியும். 

நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்தாண்டு இறுதி தேர்வாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்கக் கூடாது. இதேபோல், தமிழக அரசு கேபிள் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு 3 கோரிக்கைகளாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் சுங்கவரி சோதனை சாவடிகளில் பல மடங்கு கட்டண உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் 32 சுங்கவரி சோதனை சாவடிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் . 

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...