Exclusive: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை : கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர், மதுரை, கரூர், திருச்சி, நீலகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவை : கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர், மதுரை, கரூர், திருச்சி, நீலகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் துவங்கியதையடுத்து பள்ளி விடுமுறைகளைக் கொண்டாட பெற்றோர்கள், அவர்களது குழந்தைகளை தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்வது வழக்கம். அதே போல், இந்த மாதம் கோயில் திருவிழாக்களும் அதிகம் உள்ளது. இதனால், கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 60 கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் இயக்கப்படும். அதேபோல், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,” என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...