கோவை : கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியில் கண்ணை கவரும் 3டி ஒளி, ஒலி காட்சி வரும் மே 4-ம் தேதி முதல் சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் நடைபெற உள்ளது.

ஆதியோகி சிவனுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, கோவை ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடியில் ஆதியோகியை சத்குரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ஆதியோகியை தரிசிப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், ஆதியோகியின் வாழ்க்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ”ஆதியோகி திவ்ய தரிசனம்” என்னும் 3டி ஒளி, ஒலி காட்சியை கடந்த மஹாசிவராத்திரி அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, வரும் மே 4-ம் தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகள், அமாவாசை, பெளர்ணமி தினங்கள் மற்றும் விஷேச நாட்களில் ஆதியோகி 3டி ஒளி, ஒலி காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தொடங்கி சுமார் 15 நிமிடங்கள் நடைபெறும். ஆதியோகி திவ்ய தரிசனத்தை பார்வையிடுவதற்கு எவ்வித முன்பதிவும் தேவையில்லை. கட்டணமும் இல்லை. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் வருகை தரும் பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது.