மனித உயிர்களுக்கு வேட்டாகும் தொடர் மின்வெட்டு : இருளில் மனித உயிர்களை பலி வாங்கும் காட்டு யானைகள்

கோவை : வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் ஏற்படும் மின்சார தடையே, பொதுமக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகும் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கோவை : வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் ஏற்படும் மின்சார தடையே, பொதுமக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு பலியாகும் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. 

காருண்யா நகர் அருகே உள்ள நூர்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவரின் மனைவி எஸ். சின்னமணி (65). உடல்நலக் குறைவால் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சின்னமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, நேற்று இரவு மின்சாரம் தடைபட்டதால், புழுக்கம் தாங்காமல் வீட்டின் வெளியே சின்னமணி படுத்திருந்தார். அப்போது, சுமார் அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டின் பக்கம் குட்டியுடன் வந்த காட்டு யானை சின்னமணியை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு கோவை மாவட்ட வனத்துறையின் சார்பில் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்பட்டது.

இதனிடையே, தங்களது பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுவதே, மூதாட்டியின் உயிரிழப்பிற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

"இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால், வீடுகளை விட்டு வெளியே தூங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். வீட்டின் உள்ளே புழுக்கம் நிலவுவதால், உயிரை பிணையம் வைத்து பெரும்பாலான குடும்பங்கள் வீடுகளுக்கு வெளியே சிறிது தூக்கம் பெறுகின்றனர். நாள்தோறும் 6 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது," என்கிறார் உள்ளூர் குடியிருப்புவாசி. 

யானைகளின் நடமாட்டத்தை தவிர்க்கும் விதமாக, வனத்துறையினர் வீடுகளுக்கு வெளியே இரவு நேரங்களில் விளக்குகளை எரிய விடுமாறு எச்சரிக்கின்றனர். ஆனால், மின்சாரம் தடைபடும்போது, எவ்வாறு மின்விளக்குகளை எரிய விடமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும், மின்வெட்டு தொடர்பாக மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். 

ஆனால், இது தொடர்பாக, ஆலந்துரை மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, தொடர் மின்வெட்டு எதுவும் இல்லை. மேலும், நேற்றிரவு டிரான்ஸ்பார்ஃமரில் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. ஆனால், காலையில் அது சீர்செய்யப்பட்டு, மின்விநியோகம் வழங்கப்பட்டது," என சிம்ப்ளிசிட்டியிடம் அதிகாரிகள் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...