கோவை : தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவை : தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வரும் நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. அதோடு, காலியாக உள்ள சூலூர் உள்பட 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று (மே 1) மே தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், மே தினக் கொண்டாட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். மே தினத்தையொட்டி, கொடியேற்றுதல், பேரணி நடத்துதல், பொதுமக்கள் கூட்டம் போன்றவற்றை சட்டத்திட்டங்களுக்குட்பட்டு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.