உதகை - கோத்தகிரி சாலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஜப்பான் மலர்கள்

நீலகிரி : உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்கள் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.

நீலகிரி : உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்கள் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளன. இந்த நிலையில், சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகை நகரில் சாலையோரங்கள், சுற்றுலா தலங்கள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலை தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும், வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜப்பான் மரங்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மலர்கள் பூக்கும். இந்த காலங்களில் மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்குவதால் மரம் முழுவதும் அழகாக காட்சியளிக்கும். நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை சாலையோரங்களில் பூத்து குலுங்கும் இந்த ஜப்பான் நாட்டு மலர்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஜப்பானில் இந்த மலர்கள் பூக்கும்போது வசந்த காலம் தொடங்கியதாகக் கருதப்படுவதால், நீலகிரியில் இந்த மலர்கள் ஜப்பான் மலர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதனை உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகம் ரசித்து செல்வதுடன், செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...