சூலூர் இடைத்தேர்தல் : அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் போது, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் போது, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 48 வேட்பாளர்கள் மொத்தம் 61 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. 

அப்போது, தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் உள்ளிட்ட 22 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 39 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...