கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளராக அருண்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ம் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை பெறப்பட்டன. மொத்தம் 55 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வாபஸ் பெற கடைசி நாள் மே 2-ம் தேதியாகும்.
இந்த நிலையில், சூலூர் இடைத்தேர்தலுக்கான பொது மேற்பார்வையாளராக அருண்குமாரை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர், தேர்தல் நடைமுறை மற்றும் மேலாண்மை பணிகளை கண்காணித்து நேர்மையாக தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள், அதிகாரி அருண்குமாரை அலைபேசி : 9385286320, தொலைபேசி : 0422-2960044, பேக்ஸ் எண் : 0422-2222296 ஆகியவற்றின் தொடர்பு கொள்ளலாம்.