சூலூர் இடைத்தேர்தல் : ரூ.10 நாணயங்களை எடுத்து வந்து டெபாசிட் தொகையை செலுத்திய வேட்பாளர்

கோவை : ரூ. 10 நாணயங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தொகையை செலுத்தினார்.

கோவை : ரூ. 10 நாணயங்களின் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கோரி மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தொகையை செலுத்தினார். 



சூலூர் இடைத்தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கே. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இதற்காக, அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது, ரூ. 10 நாணயங்களை யாரும் வாங்க மறுப்பதாலும், அந்த நாணயங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மண் சட்டியில் ரூ. 10 நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் தொகையாக செலுத்தினார்.

இந்த நாணயங்களைப் பொதுமக்களிடம் கேட்டு வாங்கியதாகவும், இந்த நாணயம் செல்லும் என்பதை உணர்த்தவே ரூ. 10 நாணயங்களைக் கொண்டு வந்து வேட்புமனு தாக்கலின் போது டெபாசிட் தொகையாக செலுத்தியதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் கே. பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...