நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உதகை கர்நாடகா பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா, உதகை படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை மலை ரயில், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளது.

இதனிடையே, உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத் துறை சார்பில் 40 ஏக்கர் பரப்பளவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கர்நாடகா பூங்கா திறக்கப்பட்டது. இவைகளை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
புல்வெளிகள், மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகை என பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த உதகை கர்நாடகா பூங்காவில் தற்போது எதிர்வரும் கோடை சீசனுக்கு தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.