கோடை சீசனுக்கு தயாராகி வரும் உதகை கர்நாடகா பூங்கா..!

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உதகை கர்நாடகா பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உதகை கர்நாடகா பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. 



நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா, உதகை படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை மலை ரயில், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளது. 



இதனிடையே, உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத் துறை சார்பில் 40 ஏக்கர் பரப்பளவில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கர்நாடகா பூங்கா திறக்கப்பட்டது. இவைகளை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

புல்வெளிகள், மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகை என பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த உதகை கர்நாடகா பூங்காவில் தற்போது எதிர்வரும் கோடை சீசனுக்கு தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...