கோவை : பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு உள்பட அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்ததால், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி வரும் நிலையில், இவர் மீது கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து நிதிகளில் முறைகேடு செய்வது மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியது என அடுத்தடுத்த புகார்கள் எழுந்தன. அத்துடன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதாகவும் கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் குவிந்தன.
இதனையடுத்து, கோவை ஆட்சியர் ராசாமணி கடந்த இரு தினங்களாக இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரனை நடத்தி வந்தார். அதில், புகார் மீது விசாரிக்க முகாந்திரம் இருப்பதால் இன்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியில் இருந்து ரவிச்சந்திரனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரனை நடத்த உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரனை நடத்தி குற்றம் நிருபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.