கோவை : ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 800 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார், பணியில் இருந்த இரண்டு பெண்களிடம் தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நஞ்சுண்டாபுரம் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று மாலை சுமார் 3.30 மணி அளவில் முகமூடி அணிந்து மர்ம நபர் வந்துள்ளார். மேலும், இவர் பணியில் இருந்த ரேணுகா, திவ்யா ஆகியோரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், பணியில் இருந்த பெண் ஊழியர்கள் கொடுக்கும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால், போலீசார் இரு பெண் ஊழியர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, நிறுவனத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.