பொன்பரப்பி சம்பவம் குறித்த தனது பேச்சை ராமதாஸ் தவறாக புரிந்து கொண்டுள்ளார் : திருப்பூரில் சி.பி.ஐ. முத்தரசன் பேட்டி

திருப்பூர் : பொன்பரப்பி சம்பவத்தில் வன்னியர் சமூகம் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரியது என்றும், நான் பேசியதை ராமதாஸ் முழுமையாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர் : பொன்பரப்பி சம்பவத்தில் வன்னியர் சமூகம் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரியது என்றும், நான் பேசியதை ராமதாஸ் முழுமையாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பொன்பரப்பி வன்முறையைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்கள் குறித்து நான் பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவியதை நம்பி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் பேசிய முழுமையான வீடியோ யூடியூப்பில் முழுவதுமாக பகிரப்பட்டுள்ளது. அதனை அவர் முழுவதுமாக கேட்க வேண்டும். 

பாப்பிரெட்டிப்பட்டி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், உடனடியாக அங்கு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். பொன்பரப்பியிலும் அதேபோல் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். மேலும், நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நடக்கவுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் என 22 தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியடையும் என்று கருதி 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது ஜனநாயக விரோத செயல். 

தனது சொந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வாக்களித்த ஓ.பி.எஸ். உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அ.தி.மு.க. கட்சியும், ஆட்சியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?. இந்த விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்துள்ளதைத் திரும்ப பெறவேண்டும். அவை நிறைவேற்றப்பட்டால் தமிழகம் பாலைவனமாக்கப்படும், எனக் கூறினார். 



இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் கூறுகையில், "பொன்பரப்பி சம்பவத்தில் முத்தரசன் பேசாத ஒன்றை பேசியதாக, சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பியதை நம்பி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது வதந்தியே, அன்றைய தினம் முத்தரசன் பேசியதை யூடியூபில் முழுவதுமாக பகிர்ந்துள்ளோம். அதனை அவர் முழுவதுமாக பார்க்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது அப்படி ஏதேனும் வன்னியர்கள் குறித்து தவறாகப் பேசியிருந்தால், அதற்கான முழு பொறுப்பையும் கட்சி ஏற்றுக்கொள்ளும்," என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...