உலகிலே அதிகபட்ச வெப்பநிலை நிலவிய நகரமாக வடஇந்தியாவைச் சேர்ந்த மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் நகரம் உள்ளது.

ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் தனது பணியை தொடங்கி விட்டது. குறிப்பாக, வடமாநிலங்களில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பம் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் நகரில் நேற்று பதிவான வெப்பநிலையின் அளவு, உலகளவில் அதிகபட்ச வெப்பநிலையாக இருந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இ.எல். டோரடோ காலநிலை குறித்த இணையதள பக்கத்தில், கார்கோனில் நேற்று 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதாகவும், இது உலகளவில் அதிகபட்ச வெப்பநிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதிக்குட்பட்ட அகோலா நகரில் 46.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையுடன், அதிகளவு வெப்பநிலை நிலவிய 2-வது நகரமாக உள்ளது. மேலும், உலகளவில் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட முதல் 15 நகரங்களின் பட்டியலில் விதர்பா பகுதியில் மட்டும் 6 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தின் கந்த்வா 45.1 டிகிரி செல்சியசுடன் 10-வது இடமும், ஓசங்காபாத் 44.7 டிகிரி செல்சியசுடன் 13-வது இடத்தையும் பிடித்துள்ளது.
1901-ம் ஆண்டு முதல் அதிகபட்ச வெப்பநிலை நிலவிய ஆண்டாக 2018-ம் ஆண்டை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது நிலவி வரும் வெப்பநிலை, அந்த புள்ளி விபரங்களை மாற்றிவிடுமோ என்ற அளவிற்கு உள்ளது. சாதாரண கோடை நாட்களை விட மத்திய இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 0.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.