கோவையில் பேருந்து பயணியிடம் நகை பறிக்க முயற்சி : தப்பியோடிய பெண்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : கோவையில் பேருந்தில் பயணியிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடிய 4 பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை : கோவையில் பேருந்தில் பயணியிடம் நகை பறிக்க முயன்று தப்பியோடிய 4 பெண்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்றுள்ளது. அப்பேருந்தில் கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த பேருந்தில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் மற்றும் உடனிருந்த இன்னொரு பெண்ணிற்கும் அமர இடமளித்துள்ளனர். பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த சக பயணிகள் அவர்களை மடக்கி பிடித்தனர். வைசியாள் வீதியில் பேருந்தை நிறுத்தியதும், நான்கு பெண்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர். கெம்பட்டி காலணி பகுதிக்குள் ஓடிய பெண்களை, சில பேருந்து பயணிகள் பின்தொடர்ந்து ஓடி பிடிக்க முயன்றனர். திருடர், திருடர் என சத்தமிட்டதால், ஓடிய 4 பெண்களையும் அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். 

இதையடுத்து, 4 பேரையும் சராமரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கடைவீதி காவல்துறையினரிடம் 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 4 பெண்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...