கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ம் தேதி துவங்கியது.

சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய முதல் நாளில் இரண்டு சுயேட்சைக்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் நூர்முகமது கோமாளி வேடமணிந்து வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இரண்டாம் நாளான்று ஒரே ஒரு வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. ஈஸ்வர மூர்த்தி என்ற விவசாயி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து மூன்றாம் நாளில் 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சமூக நீதிக்கட்சி சார்பில் கணேசன் என்பவரும், அரசூரை சேர்ந்த ரமேஷ்குமார், கள் இயக்க கதிரேசன் இரண்டாவது வேட்பு மனு என 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நான்காவது நாளில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ஆக வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய 4 நாட்களில் 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 7 பேரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். வெள்ளிக்கிழமையான நாளை திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன், சமூக ஆர்வலர் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், 29 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அன்று அமமுக வேட்பாளர் சுகுமார், அதிமுக வேட்பாளர் கந்தசாமி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் நாளை மற்றும் திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.