சூலூர் இடைத்தேர்தல் – 4 நாட்களில் 7 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ம் தேதி துவங்கியது.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ம் தேதி துவங்கியது. 

சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பாலகிருஷ்ணனிடம் வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய முதல் நாளில் இரண்டு சுயேட்சைக்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் நூர்முகமது கோமாளி வேடமணிந்து வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கள் இயக்கம் சார்பில் கதிரேசன் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

இரண்டாம் நாளான்று ஒரே ஒரு வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. ஈஸ்வர மூர்த்தி என்ற விவசாயி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து மூன்றாம் நாளில் 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

சமூக நீதிக்கட்சி சார்பில் கணேசன் என்பவரும், அரசூரை சேர்ந்த ரமேஷ்குமார், கள் இயக்க கதிரேசன் இரண்டாவது வேட்பு மனு என 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நான்காவது நாளில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ஆக வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய 4 நாட்களில் 7 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். 7 பேரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். வெள்ளிக்கிழமையான நாளை திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன், சமூக ஆர்வலர் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால், 29 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அன்று அமமுக வேட்பாளர் சுகுமார், அதிமுக வேட்பாளர் கந்தசாமி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் நாளை மற்றும் திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...