சூலூர் இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக விஜயராகவன் அறிவிப்பு

கோவை : சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் விஜயராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை : சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் விஜயராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த விஜயராகவனுக்கு பிரியா என்ற மனைவியும், மகிழன், மதிவதினி ஆகிய குழந்தைகள் உள்ளனர். 34 வயதான இவர் கடந்த 12 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து, அக்கட்சியில் இருக்கிறார். தற்போது நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை செயலாளராகவும், கோவை கிழக்கு மண்டல செயலாளராகவும் உள்ளார். கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு, 2,873 வாக்குகள் பெற்று, 7-வது இடம் பிடித்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் சூலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை வரும் 26-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...