கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தியது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளான சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கான வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் இன்னும் அறிவிக்காமலே இருக்கின்றன. மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் விஜயராகவன் களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை முதல் சூலூர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் அதிக முறை தேர்தலில் போட்டியிட்டுள்ள 'தேர்தல் மன்னன்' நூர் முகமது முதலாவதாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.