கோவையில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி மற்றும் சாந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சரோன் ரிச்சா, காடுவெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் மாணவி சரோன் ரிச்சா, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், கடந்த இரண்டு நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். 

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டிற்கு வந்த அவரது தாய் சாந்தி, மகள் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தாயாரின் அழுகுரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சரோன் ரிச்சாவை மீட்டு பரிசோதனை செய்ததில், மாணவி இறந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...