கோவை : கோவையில் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வளர்ப்பு தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் காட்டூர் நாகப்பன் வீதியை சேர்ந்தவர் உஷா என்பவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் மகேந்திரன் என்பவரை 2-வதாக திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி உஷாவின் மூத்த கணவரின் மகளை மகேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளியான வளர்ப்பு தந்தைக்கு ஒவ்வொரு சட்ட பிரிவுக்கும் ஒரு ஆயுள் வீதம் மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு மகிளா) ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.