வேட்பாளர் அறிவிப்பு முன்பே இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ள அ.தி.மு.க

கோவை : சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.


கோவை : சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தியது. மீதம் உள்ள நான்கு தொகுதிகளான சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை ஏற்கனவே அறிவித்து விட்டது.

இன்று அ.ம.மு.க. வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தமிழக பிரதான கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தல் பணிக்குழுவை தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் கழக உறுப்பினரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கோவை புறநகர், மாநகர், திருப்பூர் மாநகர், புறநகர், நீலகிரி, நாகபட்டினம், விழுப்புரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, பெரம்பலூர், தென் சென்னை வடக்கு, வட சென்னை வடக்கு (மேற்கு) சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியில் அனைத்து பொறுபாளர்களும் பணியாற்றுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். 

கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படாமலேயே தேர்தல் பணிக்குழுவை அ.தி.மு.க. நியமித்து உள்ளது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவிற்கு பின்னர், அங்கு யாருக்கு சீட் வழங்குவது என இன்னும் முடிவு செய்யபடாமல் உள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சகோதரர் மாதப்பூர் பாலு மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பம் காரணமாகவே இன்னும் வேட்பாளர் அறிவிக்கபடவில்லை என சூலூர் பகுதி கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...