குடிபோதையில் விபத்தை ஏற்படுத்த முயன்றவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி : கோத்தகிரி அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்த முயன்றவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்த முயன்றவரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில் ஹாலம்மாள் (60) என்பவர் இயற்கை எய்தினார். அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் ஜீப்பை ஓட்டி வந்து, வேகமாக இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால், இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சமடைந்தனர். 

இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்த முயன்ற ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தும், பல மணி நேரம் கழித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...