தூமனூர் பழங்குடியின கிராமத்தில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

கோவை : கோவை மாவட்டம் தூமனூர் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீடு ஒன்றை சேதப்படுத்திய நிலையில், அதில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கோவை : கோவை மாவட்டம் தூமனூர் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, வீடு ஒன்றை சேதப்படுத்திய நிலையில், அதில் குடியிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



தூமனூர் பழங்குடியின கிராமத்தில் சி. பெருமாள் (58) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, பெருமாளின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையறிந்து, சுதாரித்துக் கொண்ட பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றியும் வீட்டை விட்டு வெளியேறினர். 

பின்னர், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என ஊர் பொதுமக்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டினர். வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...