கோடை வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை : கோவையில் அதிகபட்சமாக 17 மி.மீ.மழை பதிவு

கோவை : கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த கோடை வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கும் வகையில், அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையினால், வெயிலின் தாக்கம் தணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, விருதுநகர், நாமக்கல், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, மதுரை மற்றுன் கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 120 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக கரூர் அரவக்குறிச்சியில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் 17 மி.மீ மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், தாராபுரத்தில் 26 மி.மீ. மழையும், மூலனூரில் 20 மி.மீ. மழையும், அவிநாசியில் 11 மி.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில், கின்னிகொரையில் 26 மி.மீ. மழையும், கெத்தையில் 24 மி.மீ. மழையும், குந்தா பாலத்தில் 24 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...