நீலகிரி : நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக வேலூரை தவிர்த்து எஞ்சிய 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 6 தொகுதிகளிலும் மொத்தம் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையமான உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா மற்றும் தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது :- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.