நீலகிரி (தனி) தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனைத்து கட்சியினரின் முன்னிலையில் சீல் வைப்பு

நீலகிரி : நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.


நீலகிரி : நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.



தமிழகத்தில் ஒரேகட்டமாக வேலூரை தவிர்த்து எஞ்சிய 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 6 தொகுதிகளிலும் மொத்தம் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில், 6 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையமான உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா மற்றும் தேர்தல் பார்வையாளர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது :- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பாலிக்டெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...