நீலகிரி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், குளுகுளு காலநிலையை அனுபவிக்க உதகை தாவரவியல் பூங்காவில் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
நீலகிரி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவுற்ற நிலையில், குளுகுளு காலநிலையை அனுபவிக்க உதகை தாவரவியல் பூங்காவில் பிற மாநில சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், நீலகிரியில் குளுகுளு காலநிலை என்பதாலும் இன்று கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்து காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மே 17 முதல் 21 வரை மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, பூங்காவை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.