கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை : நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை : நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, தொகுதி வாரியாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. 



இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், ஸ்டிராங் ரூமில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டியளித்ததாவது :- 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும், 112 சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இவற்றை கண்காணிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பழுதடைந்த 57 விவிபேட் இயந்திரங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காவல்துறை கட்டுப்பாட்டில் இந்த வளாகம் இருக்கும், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...