பொள்ளாச்சியில் 9 வயது சிறுமிபாலியல் வன்கொடுமை சம்பவம் : தலைமறைவாக இருந்த வளர்ப்பு தந்தை கைது

கோவை : பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த்ஃ வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை : பொள்ளாச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகிலுள்ள கொள்ளு பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் ஒன்பது வயது சிறுமி வகுப்பில் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதைக் கண்ட பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் விசாரித்ததில், அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார். 

இதையடுத்து, அரசு பள்ளியின் மூலம் கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, கோவை குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். 

இதையடுத்து, விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் கொள்ளு பாளையம் பகுதியை சேர்ந்த பரமன் என்கிற பரமசிவத்தின் மீது பாக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தொப்பம்பட்டி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டு இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரனை மேற்கொண்டு, கோவை ஜே.எம்.5ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...