திருப்பூரில் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எதிராக வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

திருப்பூர் : திருப்பூர் தொழில்துறையை பாதிப்புக்குள்ளாக்கிய அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் எனவும், அதேபோல, ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு கேட்டு வரவேண்டாம் என வீடுகளில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் : திருப்பூர் தொழில்துறையை பாதிப்புக்குள்ளாக்கிய அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியினர் வாக்கு கேட்டு வரவேண்டாம் எனவும், அதேபோல, ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட்டுகள் வாக்கு கேட்டு வரவேண்டாம் என வீடுகளில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனும், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியதால், கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக பா.ஜ.க.வினர் பரப்புரை செய்து வந்த நிலையில், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இங்கு ஐயப்பன் பக்தர்கள் இருப்பதால் தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என போஸ்டர்களை ஒட்டினர். 



இதற்கு பதிலடியாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாலும், அதேபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டியதாலும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் பெண் குழந்தைகள் இருப்பதாலும், தொழில்துறை நலிவடைந்ததாலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எனவும் வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திருப்பூர் மாநகரப்பகுதிகளில் இரு தரப்பினரும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...