வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனில், அனைவரும் கட்சியையே கலைக்க வேண்டும் : திருப்பூரில் கமல் பேச்சு

திருப்பூர் : வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனில், அனைவரும் அவர்களுடைய கட்சியையே கலைத்துவிட வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருப்பூர் : வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனில், அனைவரும் அவர்களுடைய கட்சியையே கலைத்துவிட வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.



மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பேசியதாவது :- இங்கு கூடியிருக்கும் கூட்டம் போல யாராலும் காசு கொடுக்காமல் கூட்ட முடியாது , சமாதியில் அடித்து சத்தியம் செய்தாலும் முடியாது. டெல்லியில் இருந்து வரும் கூட்டம் நாட்டை பிரிக்க வந்தவர்கள். நடைபெற இருக்கிற தேர்தல் மிக மிக முக்கியமானது. இந்த தேசத்தை காப்பதற்கான தேர்தல். ஒரு கோடி பேருக்கு சாலை செப்பணிடும் பணி கொடுக்கப்படும் என ஒரு கட்சியில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 



அத்தனை பேருக்கு வேலை கொடுக்க அவர்களிடம் செயல் திட்டமே இல்லை. வாக்குறுதியையே பொய்யாக கொடுத்தால் எப்படி..?. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அனைவரும் அவர்களுடைய கட்சியையே கலைத்துவிட வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...