திருப்பூர் : வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனில், அனைவரும் அவர்களுடைய கட்சியையே கலைத்துவிட வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பேசியதாவது :- இங்கு கூடியிருக்கும் கூட்டம் போல யாராலும் காசு கொடுக்காமல் கூட்ட முடியாது , சமாதியில் அடித்து சத்தியம் செய்தாலும் முடியாது. டெல்லியில் இருந்து வரும் கூட்டம் நாட்டை பிரிக்க வந்தவர்கள். நடைபெற இருக்கிற தேர்தல் மிக மிக முக்கியமானது. இந்த தேசத்தை காப்பதற்கான தேர்தல். ஒரு கோடி பேருக்கு சாலை செப்பணிடும் பணி கொடுக்கப்படும் என ஒரு கட்சியில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தனை பேருக்கு வேலை கொடுக்க அவர்களிடம் செயல் திட்டமே இல்லை. வாக்குறுதியையே பொய்யாக கொடுத்தால் எப்படி..?. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அனைவரும் அவர்களுடைய கட்சியையே கலைத்துவிட வேண்டும், எனக் கூறினார்.