மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் தி.மு.க கட்சி தாவி விடும் : மேட்டுப்பாளையத்தில் தினகரன் கிண்டல்

கோவை : கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க அணி தாவி விடும் என மேட்டுப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை : கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், தி.மு.க அணி தாவி விடும் என மேட்டுப்பாளையம் பிரச்சார கூட்டத்தில் தினகரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் நகர பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராமசாமியை ஆதரித்து, அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது :- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. மற்றும் சட்டமன்றத்தில் அவரது உருவப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., மெகா கூட்டணியல்ல. மானம் கெட்ட கூட்டணி. 

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாறுபட்ட அரசியல் நிலைப்பாட்டால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. ராகுல் காந்தி தான், தங்களது பிரதமர் வேட்பாளர் என மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை தோற்கடித்தே தீருவோம் என கூறி தங்களது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அண்டை மாநிலமான கேரளாவில் கடுமையாக காங்கிரசை எதிர்க்கின்றன. இவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற போடும் நாடகம் எடுபடாது.

மேலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமையுமானால், தி.மு.க. அந்த அணிக்கு தாவி விடும். எனவே, பா.ஜ.க. மற்றும் எதிர்ப்பு வாக்குகள் தங்கள் கட்சிக்கு கிடைக்கும். ஏன் என்றால் நாங்கள் தான் மத்திய, மாநில அரசுகளை உறுதியாக எதிர்க்கின்றோம். எந்த காலத்திலும் பா.ஜ.க.,வுடன் ஒட்டோ, உறவோ இல்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளோம், என பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...