சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தேர்வு

கோவை : 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தேர்வு செய்யப்பட்டார்.

கோவை : 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக சஞ்சய் ஜெயவர்த்தனவேலு தேர்வு செய்யப்பட்டார். 

உலகளவில் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கான மெஷின்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோவை லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமாக இருப்பவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு. இவர், 2018-19-ம் ஆண்டின் சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அதோடு, கடந்த 2006-07-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. தமிழ்நாடு ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2002-2004-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ. டெக்ஸ்டைல்ஸ் துணை குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்த நிலையில், சஞ்சய் ஜெயவர்த்தனவேலு 2019-2020-ம் ஆண்டுக்கான சி.ஐ.ஐ. தென்மண்டல தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஐதராபாத்தைச் சேர்ந்த ரெட்டி'ஸ் லெபோரெட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சதிஷ் ரெட்டி சி.ஐ.ஐ. தென்மண்டலத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, 2014 முதல் 2019 வரை சி.ஐ.ஐ.யின் மற்றும் சி.ஐ.ஐ.யின் தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், 2003-04-ம் ஆண்டுகளில் சி.ஐ.ஐ.யின் தேசிய ஃபார்மா கமிட்டி மற்றும் சி.ஐ.ஐ. ஆந்திரப்பிரதேச மாநில ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...