காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்ற முயற்சிக்கிறது : கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றச்சாட்டு

கோவை : காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றச்சாட்டியுள்ளது.

கோவை : காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் குற்றச்சாட்டியுள்ளது.

கோவை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தற்போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசியதாவது :- பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஊக்குவிக்கும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை உடனே பணி நீக்கம் செய்து தகுந்த சட்ட நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். வழக்கு போடுவதோடு அரசின் பணிகள் முடிவதில்லை. பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு 8 நாட்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால், இது ஏதும் நடைமுறையில் இல்லை. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பொறுத்தவரை அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல்துறையை மாற்றாமல் உண்மை வெளிவராது. காவல்துறையும், நீதித்துறையும் கிரிமினலை காப்பாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர், என்றனர்.

இந்த சந்திப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மனித உரிமைப் போராளி ரத்தினம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு .ராமகிருட்டிணன், தமிழர் அவைய பொறுப்பாளர் இளங்கோவன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் ச.பாலமுருகன், வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...