கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் தங்களது பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

புகைப்படம் : பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தை வரவேற்கும் பெண்
தமிழகத்திற்கு 2-வது கட்டமாக வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட சுயேட்சைகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவை மாவட்டத்தில் தேர்தல் ஜூரம் தொற்றிக் கொண்டது.
பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், கோவை மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், வீடு வீடாகச் சென்றும், பொது இடங்களிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் குழம்பி நிற்கும் வேளையில், பல்வேறு இடங்களில் கூட்டங்களைக் கூட்டி, தனது அனுபவ பேச்சுக்களினாலும், வாக்குறுதிகளினாலும் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

புகைப்படம் : ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வருபவர்களிடம் வாக்கு சேகரிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மகேந்திரன்.
இதனிடையே, தேர்தல் விதிகளுக்குட்பட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்கின்றனவா...? என தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.