கோவையில் சிறுமி கொலை விவகாரத்தில் 6 பேரிடம் விசாரணை : விரிவான விசாரணைக்காக 10 தனிப்படைகளுடன் கூடுதல் போலீசார் சேர்ப்பு

கோவை : கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் விரிவான விசாரணைக்காக 10 தனிப்படைகளுடன் கூடுதல் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.


கோவை : கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் விரிவான விசாரணைக்காக 10 தனிப்படைகளுடன் கூடுதல் போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களின் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, பள்ளிக்குச் சென்ற சிறுமி, பள்ளி முடிந்து கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். மேலும், விடிய விடிய பல்வேறு பகுதிகளில் குழந்தையை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு, சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

தொடர்ந்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குற்றவாளிகளை பிடிக்க தாமதிப்பதைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை முன்பு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியின் உடலை நேற்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 



இதனிடையே, தங்களது வீட்டின் அருகில் வசித்து வரும் விஜயகுமார், துரைராஜ், சந்தோஷ்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இருப்பினும், 10 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சந்தோஷ், துரை, சதிஷ், விஜயகுமார் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே, டி.எஸ்.பி. மணி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், துடியலூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீனாம்பிகை உள்பட கூடுதலாக 4 ஆய்வாளர்கள், 2 ஏ.டி.எஸ்.பி.கள் ஆகியோர் வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் இந்த வழக்கு சம்மந்தமான கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகள் கூடுதலாக வழக்கு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...