கோடநாடு கொலை வழக்கு ஏப்.,10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் ஈடுபடுத்த திட்டம் தீட்டிய வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



இந்த நிலையில், இன்று குற்றவாளிகள் 10 பேரும் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, குற்றவாளிகள் அனைவரும் எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி வழக்கை, அன்றைய தினத்திற்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...