வாக்குச்சாவடிக்கான விபரங்கள் மற்றும் தேர்தல் புகார்களுக்கு இலவச புகார் எண் 1950

கோவை : பொதுமக்களின் வாக்குச்சாவடிக்கான விபரங்கள் மற்றும் தேர்தல் குறித்த புகார்களை அளிக்க தேர்தல் ஆணையம் 1950 என்ற இலவச புகார் எண்ணை அறிவித்துள்ளது.

கோவை : பொதுமக்களின் வாக்குச்சாவடிக்கான விபரங்கள் மற்றும் தேர்தல் குறித்த புகார்களை அளிக்க தேர்தல் ஆணையம் 1950 என்ற இலவச புகார் எண்ணை அறிவித்துள்ளது.

1950 என்ற எண் மூலம் வாக்காளர்கள் தேர்தல், வாக்களித்தல், விதிமுறைகள் என அனைத்துத் தகவல்களையும் ஃபோன் கால் மூலம் தெரிந்துகொள்ள முடியும். கூடுதலாக சுய தகவல்கள், பூத் அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகிய தகவல்களையும் இந்த ஹெல்ப்லைன் நம்பர் மூலம் வாக்களர்கள் பெறலாம். www.nvsp.in என்ற இணையதளப் பக்கத்தையும் வாக்காளர்கள் பயன்படுத்தலாம். இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பியும் வேண்டிய தகவல்களைப் பெறமுடியும். எஸ்.எம்.எஸ் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தகவல்களைப் பெற கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றலாம்.

(i) ECI <EPIC Number> <0 (ஆங்கிலத்தில் பதில் விரும்புவோர்) or <1 (பிராந்திய மொழிகளில் பதில் விரும்புவோர்).

(ii) ECIPS <EPIC Number>EPIC எண் என்பது இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண். வாக்களர்களிடம் வெறும் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது. கூடுதலாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 அரசு ஆவனங்களுள் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக வாக்களர் பெயர்ப் பட்டியலிலும் பெயர் இருக்க வேண்டியது அவசியம்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...