கோவை : கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரியல்வாதி பாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். மேலும், பாரூக்கின் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று அண்ணாமலை அரங்கில் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 'மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்' என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படுகொலைகள் தடுக்கப்பட வேண்டும் எனவும், மத அடிப்படைவாதங்கள் மாற வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சுந்தரவள்ளி, எழுத்தாளர் பீர் முஹம்மது, எழுத்தாளர் பாமரன் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் நேரு தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் சுயமரியாதைத் திருமணமும் நடைபெற்றது.