கோடநாடு வழக்கு குற்றவாளி சயானை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளி சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளி சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர்.



இதனிடையே, சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வழக்கறிஞர், இருவரையும் கைது செய்ய தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி, அவர்களை 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த சூழலில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்த போலீசார், உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், சயான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கோடநாடு கொலை வழக்கு சயானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று உத்தரவிட்டார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...