கோவை : மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வரும் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய உண்மை தெரிந்துவிடும்.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன், தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சி தொகுதிக்கு இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன. மினி டெம்போக்களில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் ஒட்டியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரியின் அனுமதி கிடைத்தவுடன் மக்கள் நீதி மய்யம் பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது.