கோவை : மாரடைப்பால் உயிரிழந்த சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜின் உடல், இறுதி ஊர்வலத்திற்கு பிறகு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கோவை : மாரடைப்பால் உயிரிழந்த சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜின் உடல், இறுதி ஊர்வலத்திற்கு பிறகு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் (64) மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டமன்ற சபாநாயகர் தனபால் உள்ளிட்ட அ.தி.மு.கவினரும், பா.ஜ.க.,வின் மத்திய கயிறு வாரியத் துறை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ. தனியரசு உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அவரது உடல் காமனாய்கன் பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அருகே உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
