அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் : அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

திருப்பூர் : அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் பிள்ளை தெரிவித்துள்ளார்.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார் . அதனடிப்படையில், இன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினரை சந்தித்து ஆதரவு கோரினார். 

அப்போது, தொழில்துறையினர் மத்தியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “திருப்பூருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. நான்காவது திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளதால், திருப்பூரை சிங்கப்பூராக மாற்ற வேண்டியதே நம் அரசின் நோக்கம்,” என பேசினார். 



மேலும், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொழில்துறையினருக்காக அம்மா செய்துள்ள நலத்திட்டங்களால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். அதில், திருப்பூர் தொகுதி முதன்மையான தொகுதியாக இருக்கும்,” என பேட்டியளித்தார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...